பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் 40 பேருக்கு சிறை
இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில் பல கோடிக்கணக்கான பொதுச்சொத்துகள் சேதமாகி தீவைத்து எரிக்கப்பட்டன;
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இம்ரான்கான் இருந்தார். இந்தநிலையில் வெளிநாட்டு பரிசு பொருட்களை குவித்த 'தோஷ்கானா' வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அபோட் சிறையில் கடந்த 2022-ம் ஆண்டு அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் ஆதரவாளர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் 2023-ம் ஆண்டு ஈடுபட்டனர்.
தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில் பல கோடிக்கணக்கான பொதுச்சொத்துகள் சேதமாகி தீவைத்து எரிக்கப்பட்டன. சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இதுதொடர்பாக இஸ்லாமாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக இம்ரான்கானின் கட்சியான தெரிக்-இ-பாகிஸ்தான் கட்சி முக்கிய தலைவர்கள் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 10 தலா ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.