தைவானை சுற்றி ராணுவ பயிற்சி நடத்தும் சீனா - போர் பதற்றம் அதிகரிப்பு
தைவானை அச்சுறுத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அறிவித்தார்.;
பீஜிங்,
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க போர்ப்பயிற்சிகளை நடத்தி சீனா பதற்றத்தை தூண்டுகின்றது.
மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தைவானை அச்சுறுத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அறிவித்தார். ஆனால் தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என சீனா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கூட்டு ராணுவ பயிற்சி நடத்துவதற்காக தைவானை சுற்றிலும் விமானப்படை, கடற்படைகளை சீனா குவித்து வருகிறது. இதனால் தைவான் எல்லையில் தற்போது போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.