அர்ஜென்டினா ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் காயம்; விமான சேவை பாதிப்பு

6 மணிநேரம் போராடியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.;

Update:2025-11-15 19:01 IST

பியூனோஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினாவின் பியூனோஸ் அயர்ஸ் நகருக்கு வெளியே கார்லோஸ் ஸ்பெகாசினி என்ற நகரில் ஆலை ஒன்றில் வேளாண் ரசாயன பொருட்களின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு இந்த ஆலையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், அருகேயிருந்த எஜீஜா சர்வதேச விமான நிலையத்தின் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதனால் பயணிகள் பலரும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில், 22 பேர் காயமடைந்தனர். இதனால், பக்கத்தில் இருந்த வீடுகளும் குலுங்கின. 4 கி.மீ. தொலைவிலுள்ள வீடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட தீ மளமளவென பல்வேறு கட்டிடங்களுக்கும் பரவியது. 6 மணிநேரம் போராடியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

Tags:    

மேலும் செய்திகள்