பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

'பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.;

Update:2025-06-12 00:09 IST

பாரீஸ்,

பிரான்சில் வருகிற ஒரு சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும் சிறுவர்கள் வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். சிறுவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும்நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக அவர்கள் கெட்டு சீரழிவது கண்கூடாக தெரிகிறது. இந்தநிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் ஒரு சில மாதங்களில் பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்