ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி

ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார்.;

Update:2025-12-16 14:55 IST

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே வந்து, ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

பின்னர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை , அவரது அரண்மனையில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை, அந்நாட்டு பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லாவை அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார்.

பிரதமர் மோடியும் ஜோர்டான் பட்டத்து இளவரசரும் ஒரே காரில் பயணித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எத்தியோப்பியா புறப்பட்டார். அப்போதும், விமான நிலையம் வரை காரை தானே ஒட்டி வந்த ஜோர்டான் பட்டத்து இளவரசர், மோடியை வழியனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்