காதலுக்கு கண் மட்டுமல்ல, எதுவுமே இல்லையோ..? - நண்பனின் தாயை மணந்த வாலிபர்
மகனுக்கு தெரியாமல் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்த்ததாக கூறப்படுகிறது.;
ஷிசுவோகா,
ஜப்பானில் உள்ள ஷிசுவோகா மாகாணத்தைச் சேர்ந்தவர் இசாமு டோமியோகா (வயது 33). இவர் தன்னுடன் படித்த நண்பனின் தாயான மிடோரியை (54) பல ஆண்டுகளுக்கு பிறகு தற்செயலாக சந்தித்தார்.
சமீபத்தில் கணவரை பிரிந்த அவர் தனது மகன், பேரக்குழந்தைகளுடன் வசித்து வரும் மிடோரி மீது இசாமுக்கு முதலில் பரிதாபம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சந்தித்து பேசிய அவர்களுக்கிடையே காதல்...! ஏற்பட்டது.
மகனுக்கு தெரியாமல் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்த்தனர். ஒரு கட்டத்தில், மிடோரியை திருமணம் செய்யும் விருப்பத்தை இசாமு வெளிப்படுத்தினார். முதலில் மிடோரி தயங்கினாலும் பின்னர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து மகன் முன்னிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, மிடோரியின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். இசாமு டோமியோகாவின் பெற்றோர் அவரிடம், “மிடோரிக்கு ஏற்கனவே 54 வயது, அவரால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் அநீதியானது. உனக்கு 33 வயதுதான் ஆகிறது. உங்கள் வயதுடைய ஒருவரை திருமணம் செய்து கொள்வது நல்லது” என்று தெரிவித்தனர். இருந்தும் அது பலனளிக்காமல் போனது.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் கண் மட்டுமல்ல எதுவுமே இல்லையோ என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது. இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.