பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை: ஜெய்சங்கர்

பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-23 15:19 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற எஸ்.ஜெய்சங்கர் வாஷிங்டனில் உள்ளார். அங்கு ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை இந்தியா தொடங்குகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, கடந்த ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் வர்த்தகம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்தியா, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை ஒருபோதும் நிறுத்தவில்லை, மேலும் இது தொடர்பான முடிவு 2019 இல் பாகிஸ்தான் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே, இந்தியா மிகவும் விருப்பமான நாடு என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் ஆர்வமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு நாங்கள் அந்த அந்தஸ்தை வழங்கி வந்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு அதே அந்தஸ்தை வழங்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அதன் அரசியலமைப்பின் 370வது பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இம்ரான் கான் தலைமையிலான அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம், ஆகஸ்ட் 2019 இல் அனைத்து இருதரப்பு வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்