செர்பியா: நாடாளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு - அதிர்ச்சி சம்பவம்

துப்பாக்கி சூட்டை பயங்கரவாத தாக்குதல் என அதிபர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-22 17:06 IST

பெல்கிரெட்,

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பெல்கிரெட்டில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் யுசிக் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, செர்பியாவில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை, அதிபரின் கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிபர் அலெக்சாண்டருக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றம் அருகே கூடாரம் அமைக்கப்பட்டு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதிக்கு இன்று வந்த சிலர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 57 வயதான முதியவர் படுகாயமடைந்தார். உடனடியாக விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், முதியவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றம் அருகே நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டை பயங்கரவாத தாக்குதல் என அதிபர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்