பிலிப்பைன்சில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலி

பிலிப்பைன்சில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்.;

Update:2024-07-26 15:15 IST

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பட்டன் மாகாணத்தில் உள்ள தலைநகர் மணிலா, கல்பர்சன், லூசன் ஆகிய நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மின்சாரம், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்