பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம்: அமெரிக்க விஞ்ஞானிகளின் வியக்கவைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.;

Update:2025-12-21 15:40 IST

கோப்புப்பணம் 

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜேபிஎல் (JPL) ஆய்வக விஞ்ஞானிகள் இணைந்து, பூமியின் சுழற்சி மற்றும் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். பூமியின் காந்தப்புலத்தில் உள்ள ஒரு நுணுக்கமான இடைவெளியைப் (Loophole) பயன்படுத்தி, 17 மைக்ரோவோல்ட் மின்சாரத்தை வெற்றிகரமாக உற்பத்தி செய்து சாதித்துள்ளனர்.

மாங்கனீசு - துத்தநாக பெரைட் (MnZn Ferrite) உருளையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்தச் சோதனையில், பூமி சுழலும்போது ஏற்படும் காந்த விசை மின்சாரமாக மாற்றப்பட்டுள்ளதோடு, இதனைப் பெரிய அளவில் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி அல்லது காற்று இன்றி, பூமியின் தடையற்ற சுழற்சியிலிருந்து மட்டும் மின்சாரம் எடுக்கும் இந்தக் கருவி, ஒருமுறை நிறுவப்பட்டால் தேய்மானம் அடையாமல் தொடர்ந்து இயங்கும் 'பேட்டரி' போலச் செயல்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதற்கும் தேவையான மின்சாரத்தை எடுத்தாலும், அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் சுழற்சி வேகம் ஒரு மில்லி செகண்டிற்கும் குறைவாகவே குறையும் என்பதால் இது பாதுகாப்பானது என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்