சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்

தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார்.;

Update:2025-12-20 20:43 IST

டமாஸ்கஸ்,

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க அந்நாடு அரசுப்படையுடன், அமெரிக்க படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, சிரியாவின் பெல்யரா நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க விமானப்படை மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க விமானப்படையுடன் சேர்ந்து ஜோர்டான் விமானப்படையும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எத்தனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்