சீனாவில் கொளுத்தும் வெயில்: வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பு
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் வெயில் 95 டிகிரிவரை நீடித்து வருகிறது;
Photo Credit: AP
பீஜிங்,
சீனாவில் கோடைக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெயிலில் தவித்து வருகிறார்கள்.
குறிப்பாக சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் வெயில் 95 டிகிரிவரை நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள உள்ளூர் மக்கள் தலையில் குளிர்ந்த பசை போன்ற திரவத்தை வெள்ளை துணியில் தடவி நெற்றியில் ஒட்டி கொண்டு அலைவதை பார்க்க முடிகிறது.
சீனாவில் கடும் வெயில் காரணமாக மின்சார பயன்பாடு 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் (ஜூன்) சீனாவில் நுகர்வோர் பயன்பாடு, தொழிற்சாலைகள் பயன்பாடு என மொத்தம் 150 கோடி கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.