சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்

Update:2025-03-19 00:14 IST
Live Updates - Page 2
2025-03-18 22:48 GMT

விண்கலனுக்குள் நால்வரும் நலமுடன் இருப்பதாகவும், மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

2025-03-18 22:44 GMT

கப்பலில் உள்ள விண்கலத்துக்குள் இருந்தபடி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வீரர்கள் கையசைத்தனர். 

2025-03-18 22:42 GMT

வீரர்களை வெளியே அழைத்துவர நடவடிக்கை

விண்கலனுக்குள் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்களை வெளியே அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரர்களை வெளியே அழைத்துவர டிராகன் விண்கலத்தின் கதவை  வீரர்கள் திறந்தனர்.

2025-03-18 22:36 GMT

4 விண்வெளி வீரர்களும் பத்திரமாக தரையிறங்கியதால் உலகெங்கிலும் உள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். சுனிதா, வில்மோர் பூமி திரும்பும் நடவடிக்கைகள் நிறைடைந்து பூமிக்கு நேற்று காலை புறப்பட்டனர். டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர்.

2025-03-18 22:26 GMT

கடலில் இருந்து மீட்கப்பட்டது டிராகன் விண்கலம்

அதிகாலை 3.27 மணிக்கு தரையிறங்கிய டிராகன் விண்கலம், பத்திரமாக மீட்கப்பட்டது.  கயிறு மூலம் கட்டி, அங்கு காத்திருந்த கப்பலுக்குள் டிராகன் விண்கலம் பத்திரமாக ஏற்றப்பட்டது.

2025-03-18 22:24 GMT

பாதுகாப்பாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்-க்கு குஜராத் மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர்.

2025-03-18 22:09 GMT

படகுகளில் சென்ற மீட்பு வீரர்கள், டிராகன் விண்கலன் கதவை திறந்தனர். 

2025-03-18 22:06 GMT

தரையிறங்கிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை விண்கலத்தில் இருந்து மீட்கும் பணியில் படகுகள் ஈடுபட்டுள்ளன. 

2025-03-18 22:05 GMT

விண்வெளியில் 9 மாதங்களாக தவித்த சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக தரையிறங்கியது வரலாற்று நிகழ்வு ஆகும். 

2025-03-18 22:02 GMT

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம். விண்வெளியில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் புளோரிடா கடலில் இறங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்