அணுஉலை அமைக்க துருக்கிக்கு ரூ.80 ஆயிரம் கோடி வழங்கிய ரஷியா

முதல் அணுஉலை அமைக்க ரூ.80 ஆயிரம் கோடியை துருக்கிக்கு ரஷியா வழங்கி உள்ளது.;

Update:2025-12-28 05:15 IST

அங்காரா,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் மின்உற்பத்திக்காக இதுவரை அணுமின்நிலையம் ஒன்றும் அமைக்கப்படவில்லை. இந்தநிலையில் நாட்டின் முதல் அணுமின்நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்குள்ள மத்திய தரைக்கடல் அருகே மெர்சின் மாகாணத்தில் அக்யூவில் 2010-ம் ஆண்டு முதல் கட்டுமானம் நடந்து வருகிறது.

ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி (20 பில்லியன் டாலர்) மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த அணுஉலையின் கட்டுமானப்பணி ஏறக்குறைய முடிவடைந்ததாக அந்த நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி அல்பார்ஸ்லான் பய்ரக்தார் தெரிவித்தார். அடுத்த ஆண்டு (2026) முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த அணுஉலையை அமைக்க ரஷியாவின் தேசிய அணுஆராய்ச்சி நிறுவனமான ‘ராசோடம்’ ரூ.80 ஆயிரம் கோடி (9 பில்லியன் டாலர்கள்) நிதியுதவி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 2010 ஆம் ஆண்டு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின்படி, மத்தியதரைக் கடல் மாகாணமான மெர்சினில் உள்ள அக்குயுவில் துருக்கியின் முதல் அணுமின் நிலையத்தை ராசோடம் கட்டி வருகிறது. இந்த ஆலை இந்த ஆண்டு செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தாமதமாகிவிட்டது என்று அல்பார்ஸ்லான் பய்ரக்தார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்