விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு - எலிகளை அனுப்பி சீன விஞ்ஞானிகள் சோதனை

விண்வெளியில் 2 வாரங்கள் தங்கவைக்கப்பட்ட பின்னர் அந்த எலிகள் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரப்பட்டன.;

Update:2025-12-28 07:15 IST

பீஜிங்,

சீனா சமீபத்தில் தனது தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு 4 எலிகளை (2 ஆண், 2 பெண்) அனுப்பியது. விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. நுண்ஈர்ப்பு விசை மற்றும் அடைபட்ட சூழலில் ஏற்படும் உயிரியல் விளைவுகளை தெரிந்து கொள்வதே இதன் நோக்கமாக இருந்தது.

விண்வெளியில் 2 வாரங்கள் தங்கவைக்கப்பட்ட பின்னர் அந்த எலிகள் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு பெண் எலி 9 குட்டிகளை ஈன்றது. இது விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கத்தைப் புரிந்துகொள்ளும் சோதனையில் ஒரு மைல்கல்லாக அமைந்ததுடன், நீண்டகால மனித விண்வெளிப் பயணங்களுக்கு வழிவகுத்துள்ளது.

குட்டிகளை ஈன்ற எலி மிகவும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொண்டதாகவும், குட்டிகளை பெற்றெடுக்க தனிமையான, மறைவான இடத்தை அந்த எலி தேர்ந்தெடுத்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த எலி ஈன்ற 9 குட்டிகளில் 6 குட்டிகள் உயிர் பிழைத்ததுள்ளன. அந்த குட்டிகள் அனைத்தும் நலமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை விண்வெளியில் மனிதர்களின் வாழ்வியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என சீன விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்