ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடி மேல் நெருக்கடி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியை ஏற்கனவே டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியுள்ளது.;

Update:2025-05-23 04:48 IST

Photo Credit AP

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹார்வர்டு பல்கலைகழகத்துக்கான $2.2 பில்லியன் மானியங்களையும் $60 மில்லியன் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பெரும் நெருக்கடியை அந்த பல்கலைக்கழகத்திற்கு கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்