வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது: டொனால்டு டிரம்ப்
வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.;
வாஷிங்டன்,
வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் சரமாரியாக தாக்குதல் நடத்தின. போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில், அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றன.
இந்நிலையில், வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. அதிபருக்குரிய கடமைகள், அதிகாரங்கள் அவருக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது.நிக்கோலஸ் மதுரோவை நிரந்தரமாக காணவில்லை என்று நீதிபதிகள் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்து இருந்தால், 30 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டி இருக்கும்.
எனினும், வெனிசுலாவில் அதிபர் 30 நாட்களுக்குள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெனிசுலா 30 நாட்களுக்குள் அடுத்த தேர்தலை நடத்த முடியாது என்றும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பாக அந்த நாட்டை கண்டிப்பாக மறுகட்டமைப்பை செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார்.