அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் வீடு மீது மர்ம நபர் தாக்குதல்

சுத்தியலை கொண்டு மர்ம நபர் தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன.;

Update:2026-01-05 22:03 IST

நியூயார்க்,

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி நகரில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த வீடு மீது மர்ம நபர் ஒருவர் இன்று தாக்குதல் நடத்தி உள்ளார்.

அவர் சுத்தியலை கொண்டு தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின்போது, வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்