பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது - சசி தரூர்

தேர்தலின் போக்கு 'இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாகவும், பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-24 12:44 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட தேர்தல் நாளை(25-ந்தேதி) நடைபெற உள்ளது. தொடர்ந்து 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தேர்தலின் போக்கு 'இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாகவும், பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கைகளை இப்போது நாங்கள் சொல்லப்போவது இல்லை. ஆனால், தேர்தலின் போக்கு 'இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. நாட்டின் ஒரு பகுதியில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் இதே நிலைதான் இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் உற்சாகத்துடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அதே சமயம் பா.ஜ.க. வேட்பாளர்கள் உற்சாகத்தை இழந்துள்ளனர். பா.ஜ.க. பலமாக இருந்த இடங்களிலும் தற்போது அவர்களுக்கு ஆதரவு குறைந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது. ஜூன் 4-ந்தேதி ஆட்சிமாற்றம் ஏற்படப்போகிறது."

இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்