2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.;

Update:2025-09-17 06:49 IST

முல்லாப்பூர்,

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். ஆஸ்திரேலிய அணி , இந்தியாவுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்