2வது டெஸ்ட்: கில் விலகல்.... கேப்டன் யார் தெரியுமா ?

2வது டெஸ்ட் போட்டியில் இருந்து கில் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது;

Update:2025-11-21 13:33 IST

மும்பை,

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Advertising
Advertising

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட்நாளை கவுகாத்தியில் தொடங்க உள்ளது. முன்னதாக முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான வலியால் பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் சுப்மன் கில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அத்துடன் அந்த போட்டியிலிருந்து விலகினார். இதனால் அவர் 2-வது இன்னிங்சில் பேட் செய்யவில்லை. இந்த நிலையில் சுப்மன் கில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து கில் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவர் முழுமையாக குணமடையவில்லை எனவும் மேல் சிகிச்சைக்காக மும்பை செல்ல உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கில்லுக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாய் சுதர்சன் அணியில் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்