மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது

ஏராளமான ஆயுதங்கள் சிக்கியதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update:2025-03-30 02:48 IST

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக இனக்கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் அங்கு ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்னர். அவர்கள் மாநிலத்தின் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர் தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்  இம்பால் மேற்கு மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக இம்பால் கிழக்கு, கக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் சிக்கியதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்