வங்காளதேத்துக்கு ஆதரவு: டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பதில் சந்தேகம்?

ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.;

Update:2026-01-25 14:17 IST

துபாய்,

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வங்காளதேச அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி வங்காளதேசம் தொடரைப் புறக்கணித்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ள வங்காளதேசத்துக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நேற்று கூறுகையில், ‘20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுமா? இல்லையா? என்பது குறித்து அரசே இறுதி முடிவு எடுக்கும். வெளிநாடு சென்று இருக்கும் எங்கள் பிரதமர் நாடு திரும்பியதும் அவரிடம் ஆலோசனை பெற்று நடப்போம். நாங்கள் அரசின் அறிவுறுத்தலை பின்பற்றுவோம். ஐ.சி.சி.யின் கீழ் நாங்கள் இல்லை. உலக கிரிக்கெட்டின் பெரிய பங்குதாரரான வங்காளதேசத்தை இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. சரியான முறையில் கையாளவில்லை’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்