5 பந்துகளில் 5 விக்கெட்டுகள்.. திக்வேஷ் ரதி அசத்தல்.. வீடியோ வைரல்

இந்த போட்டியில் திக்வேஷ் ரதி மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.;

Update:2025-06-17 14:32 IST

image courtesy:PTI

மும்பை,

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் பல அறிமுக வீரர்கள் களமிறங்கிய தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் அறிமுகம் ஆன சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி குறிப்பிடத்தக்கவர். மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்திய திக்வேஷ் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய லக்னோ பந்துவீச்சாளராக சாதனை படைத்தவர்.

விக்கெட் வீழ்த்தியதை வித்தியாசமான கொண்டாடியதால் (நோட்புக் செலிபிரேஷன்) பலமுறை தண்டனையும் பெற்றார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் திக்வேஷ் மும்பையில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் தனது 4-வது ஓவரின் முதல் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி எதிரணியை சுருட்டினார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அதனை லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மொத்தமாக அந்த போட்டியில் 3.5 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்த திக்வேஷ் ரதி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்