உ.பி.வாரியர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்
அபிஷேக் நாயர், இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் உடையவர்.;
மும்பை,
இந்த வருடம் நடைபெற்ற 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன.
இதில் உ.பி.வாரியர்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி உ.பி.வாரியர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் நாயர், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் உடையவர். அத்துடன் 2024-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார். எனவே இவரது அனுபவம் உ.பி.வாரியர்ஸ் அணிக்கு நிச்சயம் வலுவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.