ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறும் அபிஷேக் சர்மா..? வெளியான தகவல்

அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.;

Update:2025-09-25 08:04 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும் பின்னர் டி20 தொடரும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள அபிஷேக் சர்மா இன்னும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை.

தற்போது ரோகித் சர்மா தனது கெரியரின் இறுதி கட்டத்தில் இருப்பதால் அவருக்கு பின் சுப்மன் கில் உடன் அபிஷேக் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்