அரைசதமடித்த ஆகாஷ் தீப்... கேலரியில் இருந்த ஜடேஜா, சுப்மன் கில் வைத்த கோரிக்கை.. வைரல்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஆகாஷ் தீப் அரைசதம் அடித்தார்.;

Update:2025-08-03 07:25 IST

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், 'நைட் வாட்ச் மேனாக' இறங்கிய ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நைட்வாட்ச் மேனாக களமிறக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் செயல்பட்டு வியக்க வைத்ததுடன் 70 பந்துகளில் தனது முதலாவது அரைசதத்தை கடந்தார்.

அவர் அரைசதம் அடித்ததும் மைதான கேலரியில் இருந்த கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜடேஜா இருவருக் கைதட்டி ஆகாஷ் தீப்பை உற்சாகப்படுத்தினர். அத்துடன் ஹெல்மெட்டை கழற்றி அரைசதத்தை கொண்டாடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆகாஷ் தீப் சிரிப்புடன் மறுத்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

தொடர்ந்து விளையாடிய ஆகாஷ் தீப் 66 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 118 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 88 ஓவர்களில் 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. ஜாக் கிராவ்லி 14 ரன்னில் முகமது சிராஜ் பந்து வீச்சில் போல்டானார். பென்டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்