2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா வெற்றி பெற 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்ஆப்பிரிக்கா
இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும், அக்ஷர் பட்டேல் 1 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.;
சண்டிகார்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் சிறப்பாக விளையாடினார். அவர் 90 ரன்கள் எடுத்தபோது ரன்-அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீஜா ஹென்ட்ரிக்ஸ் 8 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
கேப்டன் எய்டன் மார்க்ரம் (29), டிவால்ட் பிரேவிஸ் (14) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டோனோவன் பெரேரா (30), டேவிட் மில்லர் (20) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 வி இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும், அக்ஷர் பட்டேல் 1 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். இதனால், இந்தியா வெற்றி பெற 214 ரன்களை இலக்காக தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்து உள்ளது.