ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர்4 சுற்றில் இந்திய அணியின் முழு ஆட்ட விவரம்
நடப்பு ஆசிய கோப்பையின் சூப்பர்4 சுற்று இன்று ஆரம்பமாகிறது.;
image curtesy:BCCI
துபாய்,
8 அணிகள் பங்கேற்றிருந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றிருந்த 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்று நேற்றுடன் முடிந்தது.
இதன் முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். சூப்பர்4 சுற்று இன்று ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில் சூப்பர்4 சுற்றில் இந்திய அணிக்குரிய முழு ஆட்ட விவரத்தை இங்கு காணலாம்..!
1. 21-ம் தேதி - இந்தியா - பாகிஸ்தான்
2. 24-ம் தேதி - இந்தியா - வங்காளதேசம்
3. 26-ம் தேதி - இந்தியா - இலங்கை