ஆசிய கோப்பை அரையிறுதி: வங்காளதேசத்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு
ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.;
image courtesy: twitter/@ACCMedia1
தோகா,
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் இன்று நடக்கும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.