ஆசிய கோப்பை: விராட் பாஜி உங்களை மிஸ் செய்கிறோம் - ஓமன் கேப்டன் உருக்கம்

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் விராட் கோலி ஆசிய கோப்பையில் விளையாடவில்லை.;

Update:2025-09-13 15:40 IST

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.

முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை உடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டார். அதன் காரணமாக அவர் இந்த ஆசிய கோப்பையில் விளையாடவில்லை.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலியை மிஸ் செய்வதாக ஓமன் கேப்டன் ஜதீந்தர் சிங் உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “விராட் கோலி பாஜி நாங்கள் உங்களை இந்த தொடரில் மிஸ் செய்கிறோம். நீங்கள் மிகவும் சீக்கிரமாகவே ஓய்வு பெற்றுவிட்டீர்கள், ஏனெனில் ஆசிய கோப்பையில் உங்களுக்கு எதிராக விளையாடுவேன் என்று நான் நம்பியிருந்தேன். அது நடக்கவில்லை. ஆனால் எப்படியும் ஒருநாள் உங்களைப் பார்ப்போம்னு நம்புகிறேன்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்