கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

தமிழகத்தில் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-01-25 21:48 IST

புதுடெல்லி ,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். பத்ம விருதுகள் இந்தியா அரசால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 113  பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் ஒய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்