தென் ஆப்பிரிக்கா அணியில் மீண்டும் இடம்பிடித்தார் டெவால்ட் பிரெவிஸ்

ஐ.பி.எல். தொடர்பில் சென்னை அணியில் இடம்பெற்ற பிரெவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.;

Update:2025-06-27 07:34 IST

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரெவிஸ் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 ஆகஸ்ட்டில் நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்ற பிரெவிஸ் 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். அதன்பின் அவருக்கு அணியில் வாய்ப்பு வழக்கப்படவில்லை.

இதனிடையே, கடந்த ஐ.பி.எல். தொடர்பில் சென்னை அணியில் இடம்பெற்ற பிரெவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப்பின் முத்தரப்பு டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணியில் பிரெவிஸ் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்