ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம்..வரலாற்று சாதனை படைத்த டெவால்ட் பிரெவிஸ்

டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக 2-வது வேகமான சதத்தை பிரெவிஸ் அடித்தார்;

Update:2025-08-12 19:03 IST

டார்வின்,

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 125 ரன்கள் அடித்து அசத்தினார்.டெவால்டு பிரேவிஸ் 41 பந்தில் சதம் விளாசி அசத்தினார். 

இதனையடுத்து 219 ரன்கள்இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது . இதனால் 53 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சதம் அடித்ததால் மிக இளைய வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற வரலாற்று சாதனையை பிரெவிஸ்(22 வயது) படைத்துள்ளார்.

மேலும் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக 2-வது வேகமான சதத்தை பிரெவிஸ் அடித்தார். இதற்குமுன் 2017-ம் ஆண்டில் டேவிட் மில்லரின் 35 பந்துகளில் சதம் சதம் அடித்திருந்தார்.

இதனை தவிர்த்து தென் ஆப்பிரிக்கா அணிகளில் தனிநபரில் அதிக ரன்கள் எடுத்த டூபிளிசிஸ் சாதனையையும் பிரெவிஸ் முறியடித்துள்ளார். டூபிளசிஸ் 119 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் பிரெவிஸ் 125 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்