டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நீக்கம்: ஜிதேஷ் இப்போது இப்படித்தான் யோசிப்பார் -இர்பான் பதான்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா இடம்பெறவில்லை.;

Update:2025-12-20 20:01 IST

image courtesy:PTI

மும்பை,

10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் சுப்மன் கில் சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் போராடி வருகிறார்.

ஆனால் இந்த அணியில் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி உள்ளது. ஏனெனில் ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷிங் ரோலில் ஆடி வந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அற்புதமாக செயல்பட்டு வந்தார்.

அதனால் நிச்சயம் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஜிதேஷ் சர்மா தற்போது நான் என்ன தப்பு செய்தேன்? என்னை அணியில் இருந்து ஏன் நீக்கினார்கள் என்று யோசித்து கொண்டிருப்பான்?” என பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்