துலீப் கோப்பை: படிதார்,தனிஷ் மலிவார் அபார சதம்.. முதல் நாளில் மத்திய மண்டலம் இமாலய ரன் குவிப்பு

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.;

Update:2025-08-29 07:24 IST

image courtesy:PTI

பெங்களூரு,

62-வது துலீப் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தின் மைதானங்களில் நேற்று தொடங்கியது.

இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் மத்திய- வடகிழக்கு அணிகள் சந்தித்தன. இதில் டாஸ் வென்ற வடகிழக்கு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மத்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் பாண்டே 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து தனிஷ் மலிவார் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆர்யன் ஜூயல் 60 ரன்களில் ஆடி கொண்டிருந்தபோது பந்து தாக்கியதில் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆகி வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து தனிஷ் மலிவாரும், கேப்டன் ரஜத் படிதாரும் இணைந்து எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி சதம் விளாசினர். ரஜத் படிதார் 125 ரன்னில் (96 பந்து, 21 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். மழையால் முன்கூட்டியே நிறுத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் மத்திய மண்டல அணி முதல் நாளில் 77 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 432 ரன்கள் குவித்துள்ளது. தனிஷ் மலிவார் 198 ரன்களுடனும் (219 பந்து, 35 பவுண்டரி, ஒரு சிக்சர்), யாஷ் ரத்தோட் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்