முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.;

Update:2025-08-09 20:07 IST

டார்வின்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடரும், இதனையடுத்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை மதியம் டார்வினில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எப்போதும் சிறப்பாக செயல்படும் என்பதால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி வரும். எனவே இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்