மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை கண்டுகளிக்கும் இந்திய ஆடவர் அணி வீரர்கள்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.;

Update:2025-11-02 21:34 IST

சிட்னி,

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில், இன்று நடைபெற்ற 3வது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

இதனிடையே, மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதி வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்கள் மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட புகைப்படத்தில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப், கிரிக்கெட் வீரர்கள் ரிங்கு சிங், பும்ரா உள்ளிட்டோர் மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தொலைக்காட்சி நேரலையில் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்