இளையோர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி

நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது.;

Update:2025-12-18 07:30 IST

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, இலங்கையை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 46.3 ஓவர்களில் 225 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 49.1 ஓவர்களில் 186 ரன்னில் அடங்கியது. இதனால் வங்காளதேசம் 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகள் வீழ்த்திய வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் இக்பால் ஹூசைன் ஆட்டநாயகன் விருது பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வீழ்த்தியாத்தில் நோபளத்தை பந்தாடி ஆறுதல் வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இந்தியா- இலங்கை மோதுகின்றன. மற்றொரு அரைஇறுதியில் வங்காளதேசம்- பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்