ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத தமிழக வீரர்கள்
77 வீரர்கள் மொத்தம் ரூ.215.45 கோடிக்கு விற்கப்பட்டனர்.;
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்ட ஐ.பி.எல். மினி ஏலத்தில் 29 வெளிநாட்டவர், 48 இந்தியர் என 77 வீரர்கள் மொத்தம் ரூ.215.45 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த ஏலப்பட்டியலில் விஜய்சங்கர், ராஜ்குமார், துஷர் ரஹேஜா, சோனு யாதவ், இசக்கி முத்து. அம்ப்ரிஸ் உள்பட 12 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த ஏலத்தில் தமிழக வீரர்களை சில அணிகள் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவரை கூட எந்த அணியும் வாங்காதது துரதிர்ஷ்ட வசமானது.