இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்
டி20 உலகக் கோப்பை போட்டி வரை தொடருவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.;
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இந்தியாவின் ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர் பொறுப்பை உடனடியாக ஏற்கும் அவர் பிப்ரவரி, மார்ச்சில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டி வரை தொடருவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
55 வயதான ஸ்ரீதர் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக 7 ஆண்டுகள்பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.