ஆஷஸ் 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
சிறப்பாக விளையாடி ஸ்டார்க் அரைசதமடித்தார்.;
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்ட் களமிறங்கினர். ஹெட் 10 ரன்னிலும், ஜேக் 18 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய லபுஸ்சேன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேமரூன் கிரீன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரி இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிலைத்தது ஆடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு கவாஜா 82 ரன்களில் வெளியேறினார்.மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேரி சதமடித்து அசத்தினார். அவர் 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியில் முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்தது. மிட்சேல் ஸ்டார்க் 33 ரன்களுடன், நாதன் லயன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர் .
இன்று 2வது நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்டார்க், லயன் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி ஸ்டார்க் அரைசதமடித்தார்.பின்னர் அவர் 54 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் லயன் 9 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி இறுதியில் 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசி ஆர்ச்சர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 2வது இன்னிங்சில் இங்க்லாந்து அணி விளையாடி வருகிறது