கில், சாம்சன் இல்லை.. டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஜோடியை தேர்வு செய்த முன்னாள் வீரர்

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.;

Update:2025-08-30 17:23 IST

மும்பை,

கடந்த வருடம் (2024) அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இதனையடுத்து அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த வருடம் (2026) பிப்ரவரி முதல் மார்ச் மாதங்ளில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி விளையாட உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் இருக்க வேண்டும்? என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்திய அணியில் தற்போது நிறைய வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களுக்கான இடத்தில் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். அந்தப் பட்டியலில் நிச்சயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பார். பிரியன்ஷ் ஆர்யாவையும் தேடலாம்; அபிஷேக் சர்மாவும் இருக்காரு, சஞ்சு சாம்சனும் இருக்காரு. கே.எல். ராகுலும் இருக்காரு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ராகுல் சிறப்பாக விளையாடியிருக்கார். ருதுராஜ் கெய்க்வாட் நிறைய ரன்கள் எடுத்திருக்கார். இருப்பினும் என்னை பொறுத்தவரை 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரியன்ஷ் ஆர்யா, அபிஷேக் சர்மா ஆகிய மூவரில் இருவரையே தொடக்க வீரர்களாக தேர்வு செய்வேன்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்