ஹர்ஷித் ராணா தேர்வு: ஸ்ரீகாந்துக்கு கம்பீர் பதிலடி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்;

Update:2025-10-15 08:31 IST

புதுடெல்லி,

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் சமீபத்தில் விமர்சித்து இருந்தார். ‘தற்போது இந்திய அணியில் ஒரே ஒரு நிரந்தர வீரர்தான் இருக்கிறார். அவர் எதற்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சிலர் நன்றாக ஆடினாலும் அணியில் இடமில்லை. சிலர் சரியாக ஆடாவிட்டாலும் அணியில் இடம் கிடைக்கிறது. அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் கம்பீருக்கு ஆமாம் சாமி போட வேண்டும் போல’ என ஸ்ரீகாந்த் கூறியிருந்தார்.

இது தொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,

தங்களது யூடியூப் சேனலை பிரபலப் படுத்துவதற்காக 23 வயது இளம் வீரரை தனிப்பட்ட முறையில் குறி வைத்து தாக்குவது வெட்கக்கேடான செயல். ஹர்ஷித் ராணாவின் தந்தை ஒன்றும் முன்னாள் தேர்வு குழு தலைவரோ அல்லது முன்னாள் வீரரோ கிடையாது. அவர் தனது சொந்த திறமையின் மூலம் அணியில் இடம் பிடித்துள்ளார். தனிப்பட்ட முறையில் ஒருவரை மோசமாக விமர்சிப்பது நியாயமற்றது. உங்களுக்கு தாக்கி பேச வேண்டும் என்றால் என்னை பற்றி பேசுங்கள். என்னால் அதை சமாளிக்க முடியும். ஆனால் அந்த 23 வயது குழந்தையை விட்டு விடுங்கள். யூடியூப் சேனலுக்காக எதையாவது பேசாதீர்கள்’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்