ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: காலிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா

நேற்று நடந்த 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை சந்தித்தது;

Update:2025-11-09 02:45 IST

ஹாங்காங்,

ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நடந்து வருகிறது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் இடம் பெறுவார்கள். இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை சந்தித்தது. முதலில் பேட் செய்த குவைத் அணி 6 ஓவர்களில் 106 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5.4 ஓவர்களில் 79 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் குவைத் அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீக் சுற்று முடிவில் ‘சி’ பிரிவில் குவைத், பாகிஸ்தான் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 3-வது இடம் பெற்ற இந்திய அணி காலிறுதி வாய்ப்பை இழந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்