சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன் - உசேன் போல்ட்

உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.;

Update:2025-09-27 15:48 IST

கோப்புப்படம்

மும்பை,

ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2014-ல் அவர் இந்தியா வந்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வீரர்களின் திறன், அவர்களின் உழைப்பு, அதற்காக அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பார்த்து வளர்ந்தேன்.

அவர்களது கடின உழைப்பு எனக்கு உத்வேகம் தந்தது. அந்த வகையில் நாம் சார்ந்துள்ள விஷயத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்