ஐசிசி தரவரிசை: நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா

ஸ்மிர்தி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்;

Update:2025-10-29 07:34 IST

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அத்துடன் அவரது சிறந்த தரவரிசை புள்ளி இதுவாகும்.

ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னெர் (731 புள்ளி) 6 இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (603 புள்ளி) 3 இடம் சறுக்கி 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மற்ற இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (596 புள்ளி) 8 இடம் ஏற்றம் கண்டு 19-வது இடத்திலும், பிரதிகா ராவல் (564) 12 இடம் எகிறி 27-வது இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்