ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸி.வீரர் புதிய திட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.;

Update:2025-05-11 21:12 IST

image courtesy:ICC

சிட்னி,

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 11-15 வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.

ஏனெனில் அந்த அணியில் வேகப்பந்துவீச்சு துறை தென் ஆப்பிரிக்காவை விட வலுவானதாக உள்ளது. இருப்பினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான மார்னஸ் லபுஷ்சேன் புதிய திட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளார்.

இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால் அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப தயாராகும் பொருட்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளார்.

2019-ம் ஆண்டு முதல் கவுண்டி கிரிக்கெட்டில் கிளாமோர்கன் அணிக்காக விளையாடி வரும் லபுஷ்சேன் நார்தாம்ப்டன்ஷயர் மற்றும் மிடில்செக்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாட முடிவு செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்