ரசிகர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்: டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்;
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார் .முதல் நாளில் 19 விக்கெட்சரிந்த இந்த டெஸ்ட் போட்டி வியக்க வைக்கும் வகையில் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் , ரசிகர்களுக்காக வருந்துகிறேன் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஒரு தொடரை நன்றாக தொடங்குவது எப்போதும் இனிமையானது. சில ஆண்டுக்கு முன்பு பிரிஸ்பேனில் இவ்வாறு ஆடினேன். அது போல் இதுவும் சிறப்பானது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் எங்களுக்குரியதாக இல்லை. இன்றும் (நேற்று) சில நேரங்களில் கடினமாக இருந்தது. எனவே இரு நாட்களுக்குள் இது போன்ற வெற்றியை பெறுவது மிகப்பெரியது. நாளைய ஆட்டத்துக்காக டிக்கெட் வாங்கிய 66 ஆயிரம் ரசிகர்களுக்காக மிகவும் வருந்துகிறேன். என தெரிவித்தார் .