இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இம்பேக்ட் பிளேயர் விருதை வென்ற ஆல் ரவுண்டர்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.;

Update:2025-08-06 12:45 IST

Image Courtesy: @BCCI

லண்டன்,

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இதில் முதல் மற்றும் 3வது டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில் 4வது டெஸ்ட் டிரா ஆனது.

இதையடுத்து நடந்த 5வது டெஸ்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரையும் சமன்செய்து அசத்தியது. இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஒவ்வொரு தொடரின் முடிவிலும் அந்த தொடரில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்திய வீரரை தேர்வு செய்து ’இம்பேக்ட் பிளேயர்’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்தவகையில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஜடேஜா உள்ளிட்டோர் இணைந்து வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கினர்.

இந்தத் தொடரில் 284 ரன்கள் குவித்த வாஷிங்டன் சுந்தர், 7 விக்கெட்களையும் கைப்பற்றினார். மேலும் டிராவில் முடிந்த டெஸ்ட் போட்டியில் சதமும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்